பதிப்பகத்தைப் பற்றி

ஆவியுலக ஆராய்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னோடிகளில் ஒருவரும் 46 ஆண்டுகள் ஆராய்ச்சி அனுபவம் உடையவரும் இந்தத் துறையில் பல புத்தகங்களை எழுதியவரும், ஆவிகள் உலகம்  மற்றும் மனோசக்தி என்னும் மாத இதழ்களின் ஆசிரியருமான விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன் அவர்களால் இந்தப் பதிப்பகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமானுஷ்யம் என்றாலே அருவெறுப்பான விஷயமாகப் பலரால் கருதப்படுகிறது. ஆவிகள் என்ற வார்த்தையைக் கேட்டாலே பலருக்கும் குலை நடுங்குகிறது. நேற்று வரை நம்முடன் வாழ்ந்து இறந்தவர்களையே பேய் பிசாசுகள் என்று வெறுத்து ஒதுக்குகிறார்கள். இந்த எண்ணம் தவறு. ஆவிகள் என்பது ஆபத்தான விஷயமல்ல என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் விக்கிரவாண்டி வி.ரவிச்சந்திரன்

ஆன்லைனில் புத்தகம் பெறும் முறை

உங்களுக்குப் பிடித்த புத்தங்களை தேர்வு செய்து, அதற்கான பணத்தை பேமெண்ட் கேட்வே ( payment gateway ) வழியே   உங்கள் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பணம் செலுத்த வேண்டும். புத்தகத்துக்கான விலை மற்றும் பதிவு அஞ்சல் வழியேஅனுப்புவதற்காக ரூ.20 சேர்த்து பணம் செலுத்த வேண்டும். இதன் பின்னர், நீங்கள் தேர்வு செய்த புத்தகம் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். 

 

புத்தகங்களைப் பெறும் முறைகள்

எங்களது பட்டியலில் உங்களுக்கு என்னென்ன புத்தகங்கள் தேவையோ அந்தப் புத்தகங்களின் பெயர்களை ஒரு கடிதத்தில் எழுதுங்கள்.

பிறகு உங்களுடைய தெளிவான முழு விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் எழுதுங்கள். விலாசத்தைக் கூட்டு எழுத்துக்களில் எழுதாமல் தனித்தனி எழுத்துக்களில் எழுதுங்கள். அதை எங்களுக்கு அனுப்புங்கள்.

பிறகு அந்தப் புத்தங்களின் விலைகளைக் கூட்டிக் கொள்ளுங்கள். மொத்த விலையுடன் ரூ.25 தபால் செலவு சேர்த்துக் கொள்ளுங்கள். இந்தத் தொகையை தபால் ஆபீஸ் மூலம் மணி ஆர்டரில் எங்களுக்கு அனுப்புங்கள்.

இதை் காசோலையாகவும், டிராப்ட் மூலமும் அனுப்பலாம். பணம் கிடைத்த உடன், நீங்கள் கேட்கும் புத்தகங்களை நாங்கள் பதிவுத்தபால் மூலம் பத்திரமாக உங்களிடம் கிடைக்கும்படி அனுப்பி வைப்போம்.

எங்களது புத்தங்களை http://megathudanpathippagam.co.in/ என்ற இணையதளம் மூலமாகவும் பெறலாம்.